Thursday, April 9, 2009

ISRO

ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதனை - மயில்சாமி


திருவண்ணாமலை, ஏப் 8,2009 அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் சாதனை படைக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியின் 12-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, இறுதி ஆண்டு மாணவர்களை வாழ்த்தும் விழா என முக்கனி விழா நடக்கிறது.

இதில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஐஎஸ்ஆர்ஓ சந்திராயன்-1 திட்ட இயக்குனர் எம். மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினர்.

நீங்கள் பெற்ற கல்வியின் பயன் உங்கள் பெற்றோருக்கும், நாட்டுக்கும் திரும்பி செலுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. மூத்தோர்களுடன் இணைந்து பணியாற்றி நல்ல குடிமகன் என்ற பெயரைப்பெற வேண்டும்.

கடும் முயற்சியால் சாதனை படைக்க முடியும் என்பதை உலகத்துக்கு உணர்த்தியது சந்திராயன்-1 இந்த வெற்றி எதிர்காலத்தில் இன்னும் திறன் மிகுந்த செயற்கைக்கோளை உருவாக்க துணையாக இருக்கும்.

ஒருங்கிணைந்து பணியாற்றும் போது நம்மால் சாதனை படைக்க முடியும் என்பது எல்லா துறைக்கும் பொருந்தும் என்றார் அவர். விழாவில் கல்லூரி தலைவர் அமராவதி முருகையன் தலைமை வகித்தார் மற்றும் செயலர், தாளாளர் எல்.என். சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்து பேசினார் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அழஉடையப்பன், சீனி கார்த்திகேயன் உள்ளிட்டோ ர் கலந்து கொண்டனர்.

No comments: